கன்னியாகுமரியில் தேவாலயம், பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் புவியூரை சேர்ந்த கதிரேஷ் (34) என்ற கோவில் பூசாரியை கைது செய்தனர்.

Jan 12, 2024 - 22:07
கன்னியாகுமரியில் தேவாலயம், பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- வாலிபர் கைது

கன்னியாகுமரியில் தேவாலயம், பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள பள்ளிவாசல் உட்பட மாவட்ட முழுவதும் 8 பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்கள் உள்பட தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது.இதையடுத்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புவியூரை சேர்ந்த கதிரேஷ் (34) என்ற கோவில் பூசாரியை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கோவில் நிர்வாக சம்பந்தப்பட்ட பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்குவதற்காக அவர்களது பெயரில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.பின்னர் கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow