'ரிமோட் கண்ட்ரோல்' துப்பாக்கிகள்-கான்பூர் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 12.7 மி.மீ., அளவிலான 423 ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளை வாங்க முடிவு

Feb 15, 2024 - 07:52
Feb 15, 2024 - 07:57
'ரிமோட் கண்ட்ரோல்' துப்பாக்கிகள்-கான்பூர் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் 

'ரிமோட் கண்ட்ரோல்' துப்பாக்கிகளை வாங்க, கான்பூர் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. 

முப்படைகளில் உபயோகிக்கப்படும் ஆயுதங்கள், தற்சார்பு இந்தியா திட்டத்தின் வாயிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளை வாங்க, கான்பூரில் உள்ள ஆயுத நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இது குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவத்தில் 'தற்சார்பு இந்தியா' என்ற திட்டத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோர போலீசாருக்கு வழங்குவதற்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 12.7 மி.மீ., அளவிலான 423 ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள, 'அட்வான்ஸ்ட் வெபன் எக்யூப்மென்ட் லிமிடெட்' நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow