பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பானை, அடுப்பு சேர்க்க அரசுக்கு கோரிக்கை

எங்களிடம் மக்களாகிய நீங்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது மண் பானை வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்

Jan 8, 2024 - 15:17
Jan 8, 2024 - 20:14
பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பானை, அடுப்பு சேர்க்க அரசுக்கு கோரிக்கை

அரசு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழா அறுவடை திருநாளாகவும், உழவுக்கு உறுதுணையாக இருந்த எருதுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் அன்று வீட்டு வாசல் முன்பு  மாக்கோலமிட்டு, புது மண் பானையில் புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு பொங்கல் விழா கொண்டாடிய காலம் மாறி நவீன யுகத்தில் கேஸ் அடுப்பு, குக்கர், சில்வர் பாத்திரம் இவற்றின் வருகையால் மண் பானையில் பொங்கல் வைப்பதே அரிதாக போய்விட்டது.

தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் 250 குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது 20 குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த குடும்பங்கள் மட்டும் பொங்கல் பானை. அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பானைகள் செய்து காத்து இருக்கும் எங்களிடம் மக்களாகிய நீங்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது மண் பானை வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் என மன்றாடி கேட்டுக்கொண்டார் மண்பாண்ட தொழிலாளர் சுப்ரமணியன்.

அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானை, அடுப்பு சேர்த்து வழங்கினால், அரசு நமக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தொழிலை தொடருவார்கள் என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow