Gulf-ஐ கலங்கடித்த பேய் மழை எது காரணம்..? கால நிலையா..? மனிதப் பிழையா..?

யூ.ஏ.இ., ஓமன் உள்ளிட்ட பாலைவன நகரங்களை பெரும் மழை மூழ்கடித்த நிலையில் அதுகுறித்து காலநிலை ஆய்வாளர்கள் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

Apr 18, 2024 - 17:33
Apr 18, 2024 - 18:23
Gulf-ஐ கலங்கடித்த பேய் மழை  எது காரணம்..?  கால நிலையா..? மனிதப் பிழையா..?

உள் கட்டமைப்புக்கு பெயர் போன துபாய் நகரம் பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் நரகமாக மாறியிருக்கிறது. இயற்கை சீற்றத்தின் இந்த கோர தாண்டவத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மனிதப் பிழையா? அல்லது வேறு ஏதும் காரணமா?.

உலகம் முழுவதும் அசாதாரண காலநிலை மக்களை அல்லல்படவைக்கிறது. கடும் மழையை எதிர்கொண்டிருந்தால் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலை எதிர்பார்த்தால் புயல், மழையெல்லாம் சர்ப்ரைஸ் செய்கிறது. இப்படியென்றால் குளிர் நிலவும் பனிப்பிரதேசங்களில் வரலாறு காணாத வெயிலால் காடுகள் பற்றி எரிகின்றன. இப்படியான காலநிலை மாற்றம், பல நாடுகளை பதம் பார்த்துவிட்டு, பாலைவனத்தின் கதவையும் தட்டியிருக்கிறது. 

கடந்த 16 மற்றும் 17 தேதிகளில் கல்ஃப் நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் பயங்கர புயலுடன் மழை பெய்தது. ஒரு வருடத்திலேயே 94 மில்லிமீட்டர் மழை தான் பெய்யும் நிலைளில், ஓரிரூ நாட்களில் 142 மில்லிமீட்டர் மழை பெய்து இருக்கிறது. 

இதுவரை வெயிலையை பார்த்த நாடுகள், கடும் வெள்ளத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக இந்த நாடுகளின் உள்கட்டமைப்பு பெரும் மழையை எதிர்கொள்ளாதவாரே அமைக்கப்பட்டுள்ளன. இதனாலே அங்கு பெய்யும் இதுபோன்ற பெரும் மழை பெரும் துயரமாக்குகிறது.

இந்த பெரும் மழைக்கு பின், இரண்டு தலைப்புகளில் விவாதங்கள் எழுந்துள்ளன. அதில் ஒன்று கடும் மழை அல்லது கடும் வெயிலை ஏற்படுத்தி வரும் காலநிலை மாற்றத்தை குறிக்கும் எல் நினோ மற்றும் செயற்கை மழைக்காக செய்யப்பட்டும் மேக விதைப்பின் பாதிப்பு என மழைக்கு எவை காரணம் என விவாதங்கள் சூடுப்பிடித்து வருகின்றன. 

பாலைவன பகுதிகளில் மழை விதைப்பு எனும் "கிளவுட் சீடிங்"  முறையை பயன்படுத்தி செயற்கை மழையை பெய்ய வைக்கின்றனர். இப்படி செய்ததின் எதிரொலியாக மழை பெய்தது என பரவலாக தகவல்கள் பரவின.

இதனிடையே மழை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லண்டனைச் சேர்ந்த மூத்த  பேராசிரியரும், காலநிலை ஆய்வாளருமான ஃபிரட்ரிக் ஓட்டோ, வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தை வைத்திருக்கும், இதேவேளையில் காலநிலை வெப்பமடைவதால் அதிக மழை உண்டாகுவதாக அவர் குறிப்பிட்டார். கிளவுட் சீடிங் எனும் மேக விதைப்பு முறைக்கும் தற்போது பெய்த பெருமழைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார். 

புவி வெப்பமடைவதலின் விளைவாக கல்ஃப்பை சுற்றியுள்ள கடல்களில் சூடான நீர் உள்ளது, அது மேலும் சூடான காற்று பட்டு இந்த பெரும் மழையை ஏற்படுத்தியதாக, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் காலநிலை, ஆற்றல் மற்றும் பேரழிவு தீர்வுகளுக்கான துறையின் இயக்குநர் மார்க் ஹவ்டன் தெரிவித்துள்ளார். 

இதேபோல எடின்பர்க் பல்கலைகழகத்தின் காலநிலை ஆய்வாளர் கபி ஹெக்ரஸ், காலநிலை விளைவுகளால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் வரும் காலங்களில் அதிக மழையை எதிர்கொள்ளும் என எச்சரித்தார். 

ஆய்வாளர்களின் கூற்றுபடி, பெரும் மழைக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பமே காரணம் என்பது தெரிய வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow