கொலம்பஸ்..கொலம்பஸ்.. விடப்போகும் லீவு... ஏப்ரல் 13-ல் தொடங்கும் கோடை விடுமுறை...

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 13-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Mar 21, 2024 - 17:26
கொலம்பஸ்..கொலம்பஸ்.. விடப்போகும் லீவு... ஏப்ரல் 13-ல் தொடங்கும் கோடை விடுமுறை...

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் வரும் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடைவடையவுள்ளது. இதற்கிடையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்று முதல் 9-ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 23 முதல் 26 வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தம் பணிகள், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த கல்வியாண்டிற்கான கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow