திருத்தணி முருகனுக்கே வேர்க்குதே.. சதமடித்த வெப்பம்.. வெயில் தேசமான சேலம், ஈரோடு

ஈரோடு, தர்மபுரி மற்றும் கரூர் போன்ற வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது 4 - 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 8:30 மணி வரை உள்மாவட்டங்களில் உள்ள சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகி உள்ளது.

Apr 24, 2024 - 17:36
திருத்தணி முருகனுக்கே வேர்க்குதே.. சதமடித்த வெப்பம்.. வெயில் தேசமான சேலம், ஈரோடு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  திருத்தணியில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பிற்பகல் நேரத்தில் 100 டிகிரி டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். 

திருத்தணியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட வெயிலால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் கானல் நீர் தோன்றியது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் ஜூஸ், ஐஸ்கிரீம் மற்றும் பழக்கடைகளில் குவிந்தனர். 

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றவர்கள் குடைபிடித்தபடியும், தலையை துணியால் மூடியபடியும் பயணித்தனர். நேற்றைய நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது இதனால் திருத்தணியில் வசிக்கும் மக்கள் வெயில் தாக்கத்தினால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வட தமிழகத்தின் உள் மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 9 இடங்களில் வெப்பமானது 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருக்கிறது. 

தமிழகத்தில் நேற்றைய தினம் சேலத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஆனது பதிவாகி இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சேலத்தில் 108.14 பாரன்ஹீட் ஈரோடு 108 பாரன்ஹீட்,  திருப்பத்தூர் 106.88 டிகிரி பாரன்ஹீட் கரூர் பரமத்தி 106.7, வேலூர் 106 டிகிரி பாரன்ஹீட், தர்மபுரி 105.8 டிகிரி மதுரை நகரம் 105.8 டிகிரி பாரன்ஹீட்  நாமக்கல்104.5 டிகிரி பாரன்ஹீட், திருச்சிராப்பள்ளி 104.18 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் உள்ள மற்ற சமவெளி பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகி இருந்தது.
சென்னை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 100.94 டிகிரி பாரன்ஹீட் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 96.98 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow