IT தீர்ப்பாயத்திற்கு பறந்த புகார்.. மீண்டும் செயல்பட தொடங்கிய காங்., வங்கி கணக்குகள்..

காலையில் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், நண்பகலுக்கு மேல் மீண்டும் செயல்படத் தொடங்கின

Feb 16, 2024 - 13:43
Feb 16, 2024 - 13:43
IT தீர்ப்பாயத்திற்கு பறந்த புகார்.. மீண்டும் செயல்பட தொடங்கிய காங்., வங்கி கணக்குகள்..

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் காலையில் முடக்கப்பட்ட நிலையில், நண்பகலுக்கு மேல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதற்கு IT தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் அளித்த புகார் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

காங்கிரசின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி என அனைத்து அமைப்புகளின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக, 210 கோடி ரூபாய் அபராதத்தை CBI விதித்ததாகவும், இதனால் மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரத்தை பாஜக தவறாக பயன்படுத்துவதாக காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், சர்வாதிகாரத்துக்கு ஒரு போதும் பணியப் போவதில்லை என ராகுல் காந்தியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பாக IT தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், காலையில் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், நண்பகலுக்கு மேல் மீண்டும் செயல்படத் தொடங்கின. 'தேர்தல் பத்திர திட்டம்' செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow