பட்டுக்கோட்டை: முக்கியசாலையில் திடீரென பற்றியெரிந்த கார்!

Dec 28, 2023 - 16:53
Dec 28, 2023 - 18:26
பட்டுக்கோட்டை: முக்கியசாலையில்   திடீரென பற்றியெரிந்த கார்!

பட்டுக்கோட்டையில் முக்கிய வணிக வளாகங்கள் நிறைந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியான அறந்தாங்கி சாலை பகுதியில் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. அந்தப் பகுதியில் இன்று சாலையோரம் நின்றிருந்த இண்டிகா கார் ஒன்று திடீரென புகை விட்டு எறிய தொடங்கியது. இதனால் பதட்டம் அடைந்த அருகில் இருந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பெயரில் பட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீ பரவாமல் தடுத்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியான இப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கார் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வந்து பார்த்தபோது காரில் மின்கசிவு காரணமாக தீ பற்றியது தெரியவந்தது. நகரின் முக்கிய பகுதியில் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow