காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உருவ பொம்மையை எரிப்பு- தஞ்சையில் பரபரப்பு

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹெல்தரின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Feb 16, 2024 - 13:03
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உருவ பொம்மையை எரிப்பு- தஞ்சையில் பரபரப்பு

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை காவிரி மேலாண்மை ஆணையம் நிறைவேற்றியதை கண்டித்து, ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹெல்தர் உருவபொம்மையை எரித்து தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைப்பது கேள்விக்குறியாகும் என்பதால் தமிழ்நாடு விவசாயிகள் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் கடந்த 1ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஹெல்தர் நிறைவேற்றினார். 

இதனை கண்டித்து தஞ்சை பனங்கல் கட்டடம் முன்பு திரண்ட காவிரி உரிமை  மீட்பு குழுவினர், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹெல்தரின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு 177.5 டிஎம்சி காவிரி நீரை மாத வாரியாக திறந்து விட வேண்டும், உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஒரு முறை கூட கர்நாடகாவும் காவேரி ஆணையமும் செயல்படுத்தியதில்லை, தமிழ்நாடு அரசின் தலையீடு ஏன் இல்லை என விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow