Dude திரைப்படத்தில்  இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு

Dude திரைப்படத்தில்  இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கும்படி,  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dude திரைப்படத்தில்  இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு
Court orders removal of composer Ilayaraja's songs

தீபாவளிக்கு வெளியான  Dude  திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, கருத்த மச்சான் மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த 100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி, உருமாற்றி பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 அந்த மனுவில்,  இரண்டு பாடல்களையும்  பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடல்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை, நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார்.  இளையராஜா தரப்பில், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.  பாடலை உருமாற்றி உள்ளதால் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

Dude திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்று, இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தி உள்ளதற்கு முகாந்திரம் உள்ளது. அவரது பாடல்களின் புனிதத்துக்கும், அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, dude படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, 2026 ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை நீக்க ஏதுவாக ஒது வார அவகாசம் வழங்க வேண்டும் என, பட நிறுவனம் தரப்பு கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow