படிக்கட்டில் தொங்கியப்படி பயணம்-பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுநர்

பேருந்தை விட்டு இறங்கி சென்ற ஒட்டுநர் மீண்டும் பேருந்தை இயக்கி சென்றார்.

Jan 9, 2024 - 13:04
Jan 9, 2024 - 23:14
படிக்கட்டில் தொங்கியப்படி பயணம்-பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுநர்

தஞ்சையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ, மாணவிகள் நின்றதால் விபத்து ஏற்பட்டால் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தில் அரசு  பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் குறைவான அளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் இன்று காலை அலைமோதியது.பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பேருந்து இல்லாமல் நீண்ட நேரம் காத்து இருந்ததால் பேருந்து நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. 

இயக்கப்பட்ட ஒரு சில பேருந்துகளில் பயணிகள் மாணவர்கள் மாணவிகள், முண்டியடித்து பேருந்தில் ஏறினர்.பேருந்து நிரம்பியதால் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவ, மாணவிகள் நின்றனர்.படிக்கட்டுகளிலும் தொங்கியபடி பயணிகள் நின்றதால் விபத்து ஏற்பட்டால் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்தில் ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி சென்று விட்டார்.

 இதனால் பயணிகள், மாணவ, மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். அதன் பின்னர் மற்றொரு பேருந்து வந்ததால் படிக்கட்டுகளில் நின்ற பயணிகளை காவல்துறையினர் இறக்கிவிட்டு அடுத்த பேருந்தில் ஏற வைத்து அனுப்பினார்கள்.அதன் பிறகு பேருந்தை விட்டு இறங்கி சென்ற ஒட்டுநர் மீண்டும் பேருந்தை இயக்கி சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow