கனமழையினால் பாதித்த நெற்பயிரைக்கண்ட விவசாயி அதிர்ச்சியில் உயிரிழப்பு

வடிகால் சரியாக தூர்வாராத நிலையில் விளைநிலத்தில் உள்ள மழைநீர் வடியாத காரணத்தினால் விளைந்த நெற்பயிர்கள் நாசமாகியுள்ளதாக வேதனை

Jan 12, 2024 - 13:36
Jan 12, 2024 - 22:08
கனமழையினால் பாதித்த நெற்பயிரைக்கண்ட விவசாயி அதிர்ச்சியில் உயிரிழப்பு

கன மழையினால் பாதித்த நெற்பயிரைக் கண்ட விவசாயி அதிர்ச்சியில் உயிரிந்த சம்பவம் குடவாசலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே அரசவனங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசண்முகம் (87 வயது). இவர் இயற்கை விவசாயி.இவருக்கு மனைவி உள்ளார். ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்த நிலையில் மகன் கடந்த பத்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.பால சண்முகம் சுமார் 40 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார்.இயற்கை விவசாயியான இவர் தற்பொழுது தனது ஒரு ஏக்கர் நிலத்தில் தூயமல்லி என்ற பாரம்பரிய நெல் வகையை பயிரிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக அவருடைய அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழைநீரில் மூழ்கி வந்து அழுகி உள்ளது.இந்தப் பகுதியில், வடிகால் சரியாக தூர்வாராத நிலையில் விளைநிலத்தில் உள்ள மழைநீர் வடியாத காரணத்தினால் விளைந்த நெற்பயிரை காப்பாற்ற முடியாத நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இது பற்றியே புலம்பியதாக உ பகுதி விவசாயிகள் கூறிய நிலையில், இன்று காலை பயிரை நேரில் வந்து பார்த்தபோது மழைநீர் வடியாத காரணத்தினால் மனம் உடைந்து அதிர்ச்சியில் மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி உள்ளார்.அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சையளிக்க பெற்று திரும்பி வரும் நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.‌இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow