நகராட்சியிடம் அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் வைத்த பேனர்
தெருவை பராமரிப்பதும் இல்லை.இவையெல்லாம் பொதுமக்கள் கேட்டால் நிதியில்லையென சொல்றீங்க. வரி கேட்க மட்டும் வரிங்க. வார்டுக்கு செய்ய வர்ற மாட்டிங்க.
பண்ருட்டில் நகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார் கூறி நகராட்சியை கேள்விக்கேட்டு பகுதி வாசிகள் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிககு உட்பட்ட 15-வது வார்டில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு, உறையூரான் தெரு, சக்கரபாணி நகர், கடலுார் பழைய மெயின்ரோடு, அப்பர் தெரு, வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகள் உள்ளன.
இந்த நிலையில் இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை, தெருவிளக்கு வசதிகளும் இல்லை எனவும் கொசுமருந்து அடிப்பதில்லை. குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை என அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சார்பில் விளம்பர பலகை ஒன்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.
இதில் பண்ருட்டி நகராட்சி நிர்வாகமே, வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க.ஆனால் 15வது வார்டில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி, பால்வாடி பராமரிப்பு இல்லை, கொசுமருந்து அடிப்பது இல்லை, தெருவை பராமரிப்பதும் இல்லை.இவையெல்லாம் பொதுமக்கள் கேட்டால் நிதியில்லையென சொல்றீங்க. வரி கேட்க மட்டும் வரிங்க. வார்டுக்கு செய்ய வர்ற மாட்டிங்க. இவண் 15-வது மக்கள் என விளம்பர பலகை அளிக்கப்பட்டு இருந்தது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?