ராமன் ஒருபோதும் வேட்பாளராக கூடாது-கி.வீரமணி பேட்டி
தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.
பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.ராமன் ஒருபோதும் வேட்பாளராக கூடாது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். பக்தி என்பது அவரவர் தனிச்சொத்து. ஆனால் பா.ஜ.கவினர் அதை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
கட்டி முடியாத கோவிலை பிரதிஷ்டை செய்ய கூடாது என 4 சங்கராச்சாரியார்கள் கூறியுள்ளார்கள். இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்து கூற முடியுமே தவிர பாஜகவினர் கூற முடியாது.
பாஜகவை எதிர்ப்பவர்கள் சனாதான விரோதிகள், இந்து மத விரோதிகள் என கூற கூறும் பாஜகவினர் தற்பொழுது சங்கராச்சாரியார்களை பார்த்து அவ்வாறு கூறுவார்களா? முடிந்தால் பா.ஜ.கவினர் அதை கூறட்டும்.இல்லையென்றால் அவ்வாறு மற்றவர்களை கூறுவதை நிறுத்த வேண்டும்.தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.ராமன் ஒருபோதும் வேட்பாளராக கூடாது என தெரிவித்தார்.
What's Your Reaction?