ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு.. கொந்தளிக்கும் திமுக எம்எல்ஏக்கள்.. நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார்
தேர்தல் நேரத்தில் பனை மரம் தென்னை மரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்படும் என திமுக எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்தியேகன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பாமக எங்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டை நிருப்பித்தால் நாங்கள் பொதுவாழ்வில் இருந்து விலக தயார் என திமுக எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்தியேகன் மற்றும் உதயச்சூரியன் ஆகியோர் கூறியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மரணங்களுக்கு காரணம் ஆளுங்கட்சியின் அலட்சியமே என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்களும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள்,கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அபாயகரமான குற்றச்சாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் வைத்து வருகின்றனர்.இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட நினைக்கும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
நான் ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறேன். பாரம்பரியமான திமுக குடும்பத்தைச் சேர்ந்தவன். வசந்தம் கார்த்திகேயனின் குடும்பமும் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் மீது வீண் பழி சுமத்தி எங்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்க ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் முயல்கின்றனர்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்து குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு வந்த டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அவர்களை புறக்கணித்ததை மறக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் பாஜக ஆட்சியிலும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இந்த கள்ளச்சாராயத்தை பற்றி எல்லாம் வாய் திறக்காத ராமதாஸ் இந்த விவாகரத்தை பற்றி பேசி வருகிறார். அவர்கள் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் பொது வாழ்வில் இருந்து வெளியேறுகிறோம். அதே வேலையில் அதை நிரூபிக்க தவறினால் அவர்கள் அரசியல் இருந்து விலகுவார்களா என நான் கேட்கிறேன் என கூறினார்.
என்னுடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி பகுதியில் தான் உள்ளது. ஒரு மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் யாரும் இறக்கவில்லை மருத்துவரிடம் விசாரித்தபோது நாங்கள் அவர்கள் என்ன சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று சோதித்த பிறகு தான் எங்களால் சொல்ல முடியும் எனக் கூறினார்கள். மூவரும் இறந்த போது அவர்கள் மருத்துவமனைகள் இல்லை அவர்கள் இல்லத்தில் இருந்து தான் இறந்தார்கள்.பாதிக்கப்பட்ட மக்களோட இரண்டு எம்எல்ஏக்களும் நான்கு நாட்களாக அங்கே தான் இருந்தோம். அங்கே இருந்து தேவையான உதவிகளை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபரின் இல்லத்தின் வெளியே உள்ள கதவுகளில் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்எம்ஏ உதயசூரியன், தேர்தல் நேரத்தில் அனைவரின் இல்லத்தில் உள்ள கதவுகளிலும் திமுகவின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது என தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் திமுக நிர்வாகிகள் இல்லை. தேர்தல் நேரத்தில் பனை மரம் தென்னை மரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்படும். எனவே அதனை தொடர்புபடுத்தி பேச வேண்டாம்.
எங்கள் மீது தேவையற்ற புகாரை கூறும் ராமதாஸையும், அன்புமணியையும் கண்டிக்கிறோம். அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளோம்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருப்பது என்பது அவர் அரசியல் ஆதாயத்திற்காக அப்படி செய்திருக்கிறார்.அப்படி என்றால் அவர் உள்ளே சென்றது சிசிடிவிக்கான ஆதாரமும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என தெரிவித்தார். குற்றச்சாட்டு என்பது பொய்யான ஒன்று ஏற்கனவே பாமக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ஏறத்தாழ தோல்வி உறுதியாகி இருக்கிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு நாங்கள் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம் என தெரிவித்தார்.
What's Your Reaction?