55 பேரின் உயிரை காவு வாங்கிய விஷ சாராயம்.. கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸ்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55 பேர் மரணமடைந்து தொடர்பாக இதுவரை சிபிசிஐடி போலீசார் இரு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55 பேர் மரணமடைந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், கச்சிராபளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமர் சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகியோர் மீது கொலை வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் எங்கும் மரண ஓலம் கேட்கிறது. கடந்த 3 நாட்களாகவே விஷ சாராயம் குடித்தவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வருகின்றனர். இதுவரைக்கும் 55 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது கள்ளச்சாராயம்.
இந்த கள்ளச்சாராயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் கச்சராபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆகிய இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகிய மூன்று பேரும் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்தது தொடர்பாக இதுவரை சிபிசிஐடி போலீசார் இரு முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளனர்.
அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் பகுதியில் நடந்த கள்ளச்சாராயம் மரண வழக்கில் மட்டும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமன், சின்னதுரை உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் பகுதியில் கண்ணன், வீராசாமி,வீரமுத்து ஆகிய மூன்று பேர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ராமர் என்பவரிடமிருந்து விஷ சாராயத்தை வாங்கி கடந்த 18ஆம் தேதி குடித்த நிலையில் 19ஆம் தேதி காலை அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு ஒருவர் வீட்டிலும் மற்ற இருவர் மருத்துவமனையிலும் இறந்துள்ளனர்.
மேலும் சில நபர்கள் ராமரிடம் இருந்து வாங்கி குடித்த விஷ சாராயத்தால் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்ததை அடுத்து, கச்சிராபளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமர் சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகியோர் மீது கொலை வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.சின்னதுரையிடமிருந்து ராமன் என்பவர் விஷசாராயத்தை வாங்கி கச்சிராயபாளையம் பகுதியில் விற்பனை செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
What's Your Reaction?