அவசர அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள்.. ஒப்பந்ததாரருக்கு விழுந்த டோஸ்..
இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்து ஒப்பந்ததாரருக்குக் கடுமையாக எச்சரிக்கை விடுத்த எம்.பி.கனிமொழி.
இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்து ஒப்பந்ததாரருக்குக் கடுமையாக எச்சரிக்கை விடுத்த எம்.பி.கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குளத்துவாய்பட்டி கிராமத்தில் இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்து பயனாளிகளுக்குச் சாவியை வழங்கினார்கள்.
தொடர்ந்து புதிதாகத் திறக்கப்பட்ட வீடுகளைக் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவசரகதியில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் பல இடங்களில் சரியாக பூசப்படாமல், ஆங்காங்கே சில இடங்களில் சுவர்களில் விரிசல் மற்றும் குழி இருப்பதைக் கண்ட கனிமொழி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வீடுகள் கட்டிய ஒப்பந்ததாரரை அழைத்து விளக்கம் கேட்டார்.
அதனை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டதோடு, தானே மீண்டும் வந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், அப்போதும் தரமில்லை என்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க :ரோந்து காவலர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட இருசக்கர வாகனம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
What's Your Reaction?