உதயநிதி ஜெயிலுக்கு போற நாள் தான்..ஹெச்.ராஜா பேட்டியால் பரபரப்பு

இந்து விரோத தீய சக்தி உதயநிதி, இந்து விரோத கோமாளி ஆ.ராசா இவர்கள் இருவரையும் சிறையில் அடைகின்ற காலம் விரைவில் வரும் என பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Apr 4, 2025 - 12:32
உதயநிதி ஜெயிலுக்கு போற நாள் தான்..ஹெச்.ராஜா பேட்டியால் பரபரப்பு
h raja about udhayanidhi

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணியை தமிழக மக்கள் முற்றிலுமாக வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் புறக்கணிப்பார்கள். திமுக கூட்டணி இந்துக்களுக்கு விரோதமான தீய சக்தி என்பதை தமிழக மக்கள் நிரூபிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், “வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது. வஃக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களித்த அனைவரும் முழு இந்து விரோத தீய சக்திகள். தமிழகத்தில் பல இந்துக் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை வஃக்பு வாரிய சொத்துக்கள் என அபகரித்துள்ளனர். இதை ஒவ்வொரு இந்து மக்களும் புரிந்துள்ளார்கள். 1995-ல் வக்பு வாரிய சட்டம் வந்தபோது வஃக்பு வாரியத்திற்கு சொந்தமாக இருந்த நிலம் எட்டு லட்சம் ஏக்கர். ஆனால் தற்போது 12.40 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.”

“இந்துக்களின் சொத்துகளை இந்து கோயில்களின் சொத்துக்களை அபகரிக்க ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா இந்து கோயில்களுக்கு அறநிலையத்துறையில் இருந்து மின் கட்டணம் கட்டாமல் கோவில் உண்டியலில் இருந்து மின் கட்டணம் செலுத்த யார் அனுமதி வழங்கியது? இது இந்து கோயில்களின் மீதான கொள்ளை அல்லவா?” என கூறினார்.

கச்சத் தீவை தாரை வார்க்கும்போது திமுக என்ன செய்தது?

”நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கச்சத் தீவை தாரை வார்க்கும்போது கருணாநிதி போராடி இருக்க வேண்டாமா? ஆனால் இந்த கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு எதிராக போராடியது அப்போது இருந்த ஜன சங்க தலைவர்களே. தமிழ் உணர்வு கருணாநிதி குடும்பத்திற்கோ? திமுகவிற்கோ இருக்கா? தமிழ் மண்ணை தாரை வார்த்ததற்கு எதிராக போராடியது ஜன சங்கமும், பாரதிய ஜனதா கட்சியினர் தான். ஆனால் நாங்கள் தமிழ் விரோத கட்சியென கூறுகிறார்கள். 

இந்து கோயில்களின் சொத்துக்களை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திராவிட முன்னேற்ற கழகம். அதனால் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் முழுமையாக தமிழக மக்கள் திமுக கூட்டணியை புறக்கணிப்பார்கள். கச்சதீவு தாரை வார்க்கும் போது அதற்கு எதிராக பாஜக போராடியது, திமுக ஏன் போராடவில்லை? என ஊர் ஊராக சொல்ல வேண்டும். இவர்களின் தோல்விதான் தமிழ் சமுதாயத்தின் விடியலாக இருக்கும். 

உதயநிதிக்கு எதிராக இந்தியா முழுவதும் பல வழக்குகள் உள்ளன. அவர் சிறைக்குச் செல்கின்ற நாள் தான் இந்த இந்துக்களுக்கான வெற்றி. உதயநிதி இந்து விரோத தீய சக்தி, இந்து விரோத கோமாளி ஆ.ராசா இவர்கள் இருவரையும் சிறையில் அடைகின்ற காலம் விரைவில் வரும்” என ஹெச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

Read more: ‘கொங்கு மண்டலம் வீக்’.. சர்வே கொடுத்த ஷாக்: களமிறங்கும் முக்கியப் புள்ளி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow