இலவச வேஷ்டி, சேலை திட்டத்தில் முறைகேடா? - சட்டப்பேரவையில் காரசார விவாதம்..
இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறும் எதிர்கட்சிகள், அவற்றுக்கான ஆதாரம் வழங்கினால் நன்றாக இருக்கும் என அமைச்சர் காந்தி பேரவையில் கூறியிருக்கிறார்.
சட்டப்பேரவையின் வினா, விடை நேரத்தின் போது, இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி பதில் அளித்தார். குற்றச்சாட்டை கூறும் உறுப்பினர்கள், அதை ஆதாரத்தோடு வழங்கினால் நடவடிக்கை எடுக்க தயார் எனக் கூறினார். ஆதாரமில்லாமல், காலதாமதமாக வழங்கப்பட்டதாகவும், மூட்டை மூட்டையாக வேஷ்டி, சேலைகளை அரசு கட்டி வைத்திருப்பதாகவும் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகுதான் அனைத்து மக்களுக்கும் பொங்கலுக்கு முன்பாகவே வேஷ்டி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதனால் சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் காந்திக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியாக பேசிய சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரம் முடிந்த பிறகு இலவச வேஷ்டி, சேலை தொடர்பாக விளக்கம் கொடுக்கிறேன் என கூறி முடித்து வைத்தார்.
What's Your Reaction?