மத்திய அரசு மனசு வைச்சா தமிழகத்தின் கடன் குறையும் - தங்கம் தென்னரசின் புது ஐடியா...

Feb 22, 2024 - 15:36
மத்திய அரசு மனசு வைச்சா தமிழகத்தின் கடன் குறையும் - தங்கம் தென்னரசின் புது ஐடியா...

நிதிநிலையைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படாமல் இருந்தாலே, தமிழ்நாட்டின் கடன் ஆண்டுக்கு ரூ.26,000 கோடி அளவிற்கு குறையும்  என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார்.

பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதிலுரையாற்றிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், நடப்பாண்டு  ரூ.9,000 கோடி கடனும், அடுத்தாண்டு ரூ.12,000 கோடி கடனும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  

மாநில அரசின் நிதிநிலையை மேலும் பாதிக்கும் வகையில் கடுமையான நிபந்தனைகளை விதித்து, வளர்ச்சித் திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களைத் திரட்டும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

நிபந்தனையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பீட்டு நிதியாக நடப்பாண்டு ரூ.17,117 கோடியும், அடுத்த ஆண்டு ரூ.14,442 கோடியும் மாநில அரசு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறிய அவர், அவ்வாறு வழங்காவிட்டால், அதற்கு இணையான தொகை நமது கடன் வரம்பிலிருந்து கழிக்கப்படும் எனவும் கூறினார்.

மத்திய அரசு நம் நிதிநிலையைப் பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தாலே, அரசின் கடன் நடப்பாண்டு சுமார் ரூ.26,117 கோடியும், அடுத்தாண்டு ரூ.26,442 கோடி அளவிற்கும் குறைந்திருக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow