திமுக சப்போர்ட் ஐபிஎஸ், ஐஏஎஸ், தொழிலதிபர்கள்:  "சீக்ரெட்" பைல் உடன்  டெல்லி பறந்த எடப்பாடி

திமுக சப்போர்ட் ஐபிஎஸ், ஐஏஎஸ், தொழிலதிபர்கள்:  "சீக்ரெட்" பைல் உடன்  டெல்லி பறந்த எடப்பாடி
"சீக்ரெட்" பைல் உடன்  டெல்லி பறந்த எடப்பாடி

டெல்லி சென்று எடப்பாடி பழனிசாமி கையில் ஐபிஎஸ். ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்பான சீக்ரெட் பைல் ஒன்றையையும் கையில் எடுத்து சென்று இருக்கிறார். மேலும் தொகுதி பட்டியல் தொடர்பாக முடிவு செய்து மார்ச் 6-ல் தொகுதி பட்டியலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று்ள்ளன. கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், எல்முருகன் ஆகியோர் பாஜக சார்பிலும்.

டிடிவி தினகரன், அன்புமணி, வாசன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். தொகுதி பங்கீடு குறித்து ஒரளவு முடிவான நிலையில், யாருக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பது என பட்டியலை தயார் செய்து எடப்பாடி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். 

அந்த பட்டியலில் அதிமுக 173  இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும், அமமுக 10 இடங்களிலும், தமாகா 3, புரட்சி பாரதம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. மார்ச் 6-ம் தொகுதி பட்டியலை வெளியிடவும் எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம். 

அதுமட்டுமின்றி திமுகவிற்கு உதவும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் அமித் ஷா விடம்  எடப்பாடி  ஒப்படைக்க இருக்கிறார். அதற்காக சீக்ரெட் பைல் தயார் செய்து எடப்பாடி கொண்டு சென்று இருக்கிறார். அதே போன்று திமுகவுக்கு உதவும் தொழிலதிபர்கள் தொடர்பான தனி பைல் ஒன்றையும் அமித்ஷாவிடம் எடப்பாடி அளிக்க உள்ளார். அமைச்சர்கள் கே என் நேரு செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அமித்ஷாவிடம் எடப்பாடி வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow