ஊராட்சி பணியாளர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

ஊராட்சி பணியாளர்கள் மற்றும் 125 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களை தேர்தல் பிரசாரத்தில் திமுக அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

ஊராட்சி பணியாளர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை, திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்!

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலர்கள் ஆணையின்படி, மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும், 'ஊராட்சி செயலாளர்கள் மற்றும் '125 நாள் வேலை உறுதித் திட்டத்தில்' பணிபுரியும் 'பணித்தளப் பொறுப்பாளர்கள்' மற்றும் 'பணியாளர்கள்' வீடு வீடாகச் சென்று, விடியா திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது சட்ட விரோதமானது.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், விடியா திமுசு அரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊராட்சி செயலாளர்கள், 125 நாள் வேலை உறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், கழக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.

கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்காக பணிபுரியும் கிராம செயலாளர்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை, விடியா திமுக அரசு தங்களது சுய லாபத்திற்காக, தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடுத்துவதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் ஃபெயிலியர் மாடல் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow