முதலமைச்சர் குறித்த அவதூறு பேச்சு-மதுரை நீதிமன்றத்தில் செல்லூர் ராஜு ஆஜர்

அரசு வழக்கறிஞர் பழனிசாமி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

Jan 11, 2024 - 16:10
Jan 11, 2024 - 18:52
முதலமைச்சர் குறித்த அவதூறு பேச்சு-மதுரை நீதிமன்றத்தில்  செல்லூர் ராஜு ஆஜர்

முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த ஆண்டு மே 29ம் தேதி தமிழக அரசைக்கண்டித்தும், முதலமைச்சர் பதவி விலகக்கோரியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும்,  தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான இறப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் பழனிசாமி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow