படிக்கும் மாணவர்களை எச்சில் இலையை எடுக்க வைக்கலாமா?.. அறநிலையத்துறையின் செயலால் சர்ச்சை..
மாணவர்களை வகுப்பை புறக்கணிக்க வைத்து அழைத்து வந்து உணவு பரிமாற வைத்த செயலுக்கு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு கோவிலில் அன்னாதான கூடத்தில் அரசு பள்ளி மாணவர்களை வைத்து உணவு பரிமாற வைத்தது மட்டுமில்லாமல் மற்றவர் சாப்பிட்ட இலைகளை எடுக்க வைத்து டேபிள்களை சுத்தப்படுத்த வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த பிரபல திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கீழ் செயல்படுகிறது. கோவிலில் ஆகம முறைப்படி கடந்த 2018ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நடக்க வேண்டிய குடமுழுக்க நடக்காததால், தற்போது அதனை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கருவறையை சுமார் நான்கடி உயரம் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்காக மூலவர் அம்மனை பாலாலயம் செய்து அருகிலேயே புதிதாக கட்டப்பட்டுள்ள தற்காலிக தனி சன்னிதியில் மூலவர் அம்மனை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்பு பூஜைகளும்,யாகங்களும் செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும் செய்யப்பட்டு லகு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் எரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர், அறங்காவர் குழுதலைவர்,அறங்காவலர்கள்,கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானமானது சுமார் 1,000 பேருக்கு வழங்கப்பட்டது. அப்போது இலை போட்டு உணவு பரிமாற திருவேற்காட்டில் செயல்படும் அரசு பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து உணவு பரிமாற வைக்கும் வைத்துள்ளனர்.
மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் இலை போடுவது, உணவு பறிமாறுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டனர்.இதற்கென ஊழியர் அரசு சம்பளத்துடன் உள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களை வைத்து கோவில் நிர்வாகம் வேலை வாங்கியிருக்கிறாது. ஒருபடி மேலே சென்று மாணவர்களை இலை எடுக்க வைத்து சாப்பிடும் டேபிள்களை சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.
பள்ளிகள் நேற்று செயல்பட்ட நிலையில், முழு ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பள்ளியில் இருந்து மாணவர்களை படிக்கவிடாமல் அழைத்து வந்து பள்ளி வேலை நாட்களில் 8,9,10ஆம் வகுப்பு மாணவர்கள் இப்படி வேலை செய்ய கூடிய அவல நிலையானது ஏற்பட்டுள்ளது.
பள்ளி வேலை நாட்களில் மாணவர்களை அழைத்து சென்று உணவு பரிமாற வைத்த செயலுக்கு பெற்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
What's Your Reaction?