தேசிய கொடியை பிடுங்கி அவமானபடுத்திய நபர் கைது
டி.எஸ்.பி மகாதேவன் உத்தரவின்பேரில் காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்தனர்
கும்பகோணத்தில் தேசிய கொடியை பிடுங்கி அவமானபடுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம்,ஆலப்புழாவில் இருந்து உன்னி கிருஷ்ணன் (32)என்பவர் இந்தியா முழுவதும் தேசிய கொடியுடன் சுற்றிப் பார்ப்பதற்காக நேற்று இரவு கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் அனக்குடியை சேர்ந்த வெல்டிங் வேலை செய்து வரும் ராஜேந்திரன்(52)என்பவர் மதுபோதையில் சேரில் அமர்ந்திருந்த உன்னி கிருஷ்ணனிடம் தகாத வார்த்தைகள் கூறி வாக்குவாதம் செய்து உன்னி கிருஷ்ணனிடம் இருந்து தேசிய கொடியை பிடுங்கி கீழே எறிந்ததாக கூறப்படுகிறது.
இதனை தன் மொபைலில் உன்னிகிருஷ்ணன் வாக்குவாதம் செய்வதை வீடியோ எடுத்துள்ளார் பின்பு வீடியோ எடுத்த பதிவை அவர் நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளார். பின்னர் அங்கு இருந்த ரயில்வே காவல் துறையினரிடம் நடந்தவற்றைக்கூறி வீடியோ ஆதாரத்தையும் காட்டியுள்ளார்.
அதனை அடுத்து டி.எஸ்.பி மகாதேவன் உத்தரவின்பேரில் காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்தனர்.தேசியக்கொடியை பிடுங்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?