திருச்செந்தூர் கோவிலில்  மின்சாரம் தாக்கி பக்தர் பலி

பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Dec 1, 2023 - 15:26
Dec 1, 2023 - 19:06
திருச்செந்தூர் கோவிலில்  மின்சாரம் தாக்கி பக்தர் பலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மின்சாரம் தாக்கி முருக பக்தர் பலி ஆனதற்கு கோவில் நிர்வாகமே காரணம் என்று பாஜக சாலை மறியல் போராட்டம் நடத்தியது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஜோதிபாஸ். இவருடைய குடும்பத்தினர்  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். குடும்பத்துடன் கடலில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றனர்.

 ஜோதிபாஸின் மகன் பிரசாத் (22) கோவில் புறக்காவல் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட மின் எர்த் பைப் அருகில் உட்கார்ந்தார். அப்போது மின் கசிவு காரணமாக பிரசாத் மீது மின்சாரம் பாய்ந்து அங்கேயே உயிரிழந்தார்.

கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டினார்கள். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உயிரிழந்த பிரசாத் குடும்பத்திற்கு நிவாரண வழங்க வேண்டும் என்று  பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். 

அதைத்தொடர்ந்து  திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாஜகவினரிடம் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையில் கோவில் வளாகத்தில் ஒரு பக்தர் இறந்தால் அதற்கு நிவாரண பூஜைகள் செய்ய வேண்டும். இறந்தவர் குறித்து  கிராம நிர்வாக அதிகாரியே போலீசாருக்கு தகவல்  தெரிவிக்க வேண்டும். அதற்கு மாறாக நிவாரண பூஜைகள் எதுவும் செய்யாமல் அறநிலையத்துறை அதிகாரிகளே போலீஸாரத்திற்கு தகவல் தெரிவித்து இறந்தவர் உடலை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு என்று முருக பக்தர்கள் குமுறுகிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow