பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்ப்பு கம்பெனியில் பயங்கர தீ
பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி நிறுவனம் லாரி பார்க்கிங் ஏரியா போன்றவை உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா பின்புறம் ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது.இதில் திடீரென தீப்பற்றி எரியத் தூங்கி உள்ளது. இதனால் அருகே இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர மூன்று தீயணைப்பு வாகனங்களில் தண்ணிர் பீய்ச்சி அடித்தும், தீ கட்டுகடங்காமல் எரிந்தது.மேலும் தீ அதிகமாக பரவியதால் தீயணைப்பு வாகனங்கள் அருகில் இருக்கக்கூடிய பென்னாகரம், அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்து இருக்கிறது. மேலும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து குவிந்து உள்ளனர். கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் சேமித்து வைத்திருக்கும் பகுதியில் அடுத்தடுத்து என தீ பரவி வருவதால் தீயை அணைக்க பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பிளாஸ்டிக் கம்பெனியில் பணிபுரிந்தவர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்கிறதா? அவர்களின் நிலைமை குறித்து இதுவரையில் தகவல் இல்லை.பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி நிறுவனம் லாரி பார்க்கிங் ஏரியா மற்றும் வேறு நிறுவனங்கள் செயல்பட்டு உள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு மத்தியில் கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.மேலும் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்து இருக்கின்றனர. சம்பவத்தால் தர்மபுரியில் பெரும் பரப்பரப்பை ஏற்பட்டு உள்ளது.
-பொய்கை கோ.கிருஷ்ணா
What's Your Reaction?