ஈரோடு சென்ற கமல்ஹாசன்...  சிக்கிய வீடியோ... பரப்புரையின் போது என்ன நடந்தது..?

கமல்ஹாசனின் பரப்புரைக் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்கள் திரட்டப்பட்டுள்ளதாக வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Mar 30, 2024 - 13:55

திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (மார்ச் 29) ஈரோட்டில் இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார். ஈரோடு வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையத்தில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். 

அப்போது பரப்புரை கூட்டத்திற்கு  திமுகவினர்  பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்ததாகவும், அதற்கான வீடியோவை பூங்கொடி சுகந்த் என்பவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டதுடன், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கராவிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பதில் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow