4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம்... ஏன் என்று தெரியுமா..?

4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எழுதவிருக்கும் இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

Mar 30, 2024 - 12:18
4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம்... ஏன் என்று தெரியுமா..?

4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எழுதவிருக்கும் இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிந்த நிலையில், 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி 12 தேதி முடிவடையும் என்றும், ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை என அட்டவணை வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் அந்த அட்டவணையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,

"ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதியை மாற்றி அமைக்க எம்.எல்.ஏ.க்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22-ந் தேதிக்கும், 12-ந் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 23-ந் தேதிக்கும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.

புதிய அட்டவணைபடி அனைத்துப் பள்ளிகளும் தேர்வுகளை நடத்த அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow