மீண்டும் ரூ. 1 லட்சத்தை தொட்ட தங்கம் : வெள்ளியும் கிலோ ரூ 4 ஆயிரம் உயர்வு
சவரன் ரூ 1,120 தங்கம் விலை உயர்ந்து, சவரன் மீண்டும் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்னை ஆகிறது. தங்கம் மீண்டும் புதிய உச்சம் தொட்டுத்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,440க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.256க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் வெள்ளி விலை குறைந்தது.
இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய தினம் சவரனுக்கு ரூ 1,120 உயர்ந்துள்ளது. கிராம் 40 ரூபாய் உயர்ந்து, ரூ. 1,258-க்கு விற்பனை ஆகிறது. 1 லட்ச ரூபாய் கீழ் கடந்த இரண்டு தினங்களாக விற்னை ஆன தங்கம். இன்று விலை ஏற்றத்தின் காரணமாக சவரன் தங்கம் ரூ 1,00,640-க்கு விற்பனை ஆகிறது.
இதே போன்று இரண்டு தினங்களாக வெள்ளி விலையும் சரிந்து ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருந்தது. ஆனால் இன்று கிலோவிற்கு 4 ஆயிரம் ரூபாய் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமக்கு 4 ரூபாய் உயர்ந்து, கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000 விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டு தொடக்க நாளான நேற்று தங்கம்,வெள்ளி விலை குறைவு முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்திருந்தது. ஆனால் இன்று மீண்டும் தங்கம், வெள்ளி புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை கவலை அடைய செய்துள்ளது.
What's Your Reaction?

