அருணாசல பிரதேசம், சிக்கிம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்! தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு...

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தினத்தில் மாற்றம் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

Mar 17, 2024 - 17:46
அருணாசல பிரதேசம், சிக்கிம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்! தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு...

அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்த பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

குறிப்பாக அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜூலை 2-ம் தேதி நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், ஏப்ரல் 19-ம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தேதியை மட்டும் 2 நாட்கள் முன்னர் மாற்றி புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுள்ளது. 

புதிய அறிவிப்பின்படி ஜூன் 4-ம் தேதி நடைபெறவிருந்த வாக்கு எண்ணிக்கை, ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் ஜூலை 4-ம் தேதியே எண்ணப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow