"மனிதர்களுக்கு ஆபத்து..." களத்தில் இறங்கிய மத்திய அரசு - மாநிலங்களுக்கு பறந்த கடிதம்..!
பிட்புல், ராட்வீலர் உட்பட மனித உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 23 வகை நாய்களை விற்க, வளர்க்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
பிட்புல், ராட்வீலர் உட்பட மனித உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 23 வகை நாய்களை விற்க, வளர்க்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
இந்தியாவில் வளர்க்கப்படும் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்கள் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவற்றை வளர்க்க, விற்க, ஏற்றுமதி செய்யத் தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது இதையடுத்து, மத்திய விலங்கு நலன், கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாயத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், "அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் சில குறிப்பிட்ட வகை நாய்கள் வளர்க்க வழங்கி வரும் அனுமதி மற்றும் உரிமத்தை நிறுத்த வேண்டும். பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாய்களை ஏற்கனவே வளர்த்து வருபவர்கள் உடனடியாக அவற்றிற்குக் கருத்தடை செய்து, இனவிருத்தி செய்வதைத் தடுக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட முழு பட்டியல் :
1. பிட்புல் டெரியர்
2. டோசா இனு
3. அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர்
4. ஃபிலா பிரேசிலிரோ
5. டோகோ அர்ஜென்டினோ
6. அமெரிக்கன் புல்டாக்
7. போர்போயல்
8. கங்கல்
9. மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய்
10. காகசியன் ஷெப்பர்ட் நாய்
11. தென் ரஷ்ய ஷெப்பர்ட்
12. டோர்ன்ஜாக்
13. டோசாலினாக்
14. அகிடா
15. மாஸ்டிஃப்
16. ராட்வீலர்
17. டெரியர்
18. ரோடீசியன் ரிட்ஜ்பேக்
19. ஓநாய் நாய்கள்
20. கனாரியோ
21. அக்பாஷ் நாய்
22. மாஸ்கோ காவலர் நாய்
23. கேன் கோர்சோ
இந்த வகை நாய்கள் அறிமுகமில்லாதவர்களுக்கு மட்டுமல்ல அதன் உரிமையாளரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வன்முறை குணம் கொண்டவை என கண்டறியப்பட்டன. அதனால், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய விலங்கு நலன், கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாயத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, ஆபத்தான நாய்கள் எவை என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?