ரூ.110 கோடி மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்.! இன்னும் ஏன் முதலமைச்சர் ராஜினாமா செய்யவில்லை? - இ.பி.எஸ் கேள்வி

ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Mar 11, 2024 - 14:09
ரூ.110 கோடி மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்.! இன்னும் ஏன் முதலமைச்சர் ராஜினாமா செய்யவில்லை? - இ.பி.எஸ் கேள்வி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இன்னும் பதவி விலகவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக சென்னையில் ஆளுநரை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததாகக் கூறினார். அதனுடன் போதைப்பொருள் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதற்கான விவரங்கள் குறித்த பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார். அதைதொடர்ந்து தற்போது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அறிக்கை வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தற்போதைய ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டதாக குற்றம்சாட்டினார். அத்துடன் முந்தைய ஆட்சியின் போது தனக்கு தும்மல் வந்தாலே பதவி விலக வேண்டும் எனக்கூறிய இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow