சட்டப்பேரவையில் அனல் பறந்த மேகதாது விவகாரம்... அமைச்சர் பதிலில் திருப்தியில்லை - அதிமுக வெளிநடப்பு!

Feb 22, 2024 - 13:50
சட்டப்பேரவையில் அனல் பறந்த மேகதாது விவகாரம்... அமைச்சர் பதிலில் திருப்தியில்லை - அதிமுக வெளிநடப்பு!

மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனின் பதில் திருப்திகரமாக இல்லை என பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிகழ்ந்த நேரமில்லா நேரத்தின்போது காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். 

கவனயீர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்கூட கர்நாடகாவால் வைக்க முடியாது என்று கூறினார். மேகதாது திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது, உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்றும் தமது பதிலுரையில் ஆணித்தரமாக தெரிவித்தார்.

ஆனால், அமைச்சரின் இந்த பதிலில் திருப்தியில்லை என்று தெரிவித்த அதிமுகவினர், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் எதிர்ப்பு தீர்மானம் கூட நிறைவேற்றாமல் திமுக அரசு, கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கமாக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார். காவிரி ஆணையத்தின் அதிகார வரம்பை மீறி செயல்பட்ட கர்நாடக அரசுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஏன் வழக்குத் தொடரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

விவசாயி மீது அக்கறை உள்ளதாக கூறுக் கொள்ளும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதை மக்கள் அறிவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க :

https://kumudam.com/Apologize-unconditionally..-AV.-Trisha-gave-Raju-a-24-hour-curfew.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow