மக்களவைத் தேர்தல்... 33 தொகுதிகளில் களம் காணும் அதிமுக...

விளவங்கோடு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவும் வேட்பாளர் அறிவிப்பு.

Mar 21, 2024 - 12:10
மக்களவைத் தேர்தல்...  33 தொகுதிகளில் களம் காணும் அதிமுக...

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 17 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் களமிறங்குகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச் 20) வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 21) 17 பேர் கொண்ட இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பட்டியலை, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி,

1. ஸ்ரீபெரும்புதூர் -  பிரேம்குமார்
2. வேலூர் - பசுபதி
3. தருமபுரி - அசோகன்
4. திருவண்ணாமலை - கலியபெருமாள்
5. கள்ளக்குறிச்சி - குமரகுரு
6. திருப்பூர் - அருணாச்சலம்
7. நீலகிரி -  லோகேஷ் தமிழ்ச்செல்வன்
8. கோவை - சிங்கை ராமச்சந்திரன் 
9. பொள்ளாச்சி - கார்த்திகேயன் (எ) கார்த்திக் அப்புச்சாமி
10. திருச்சி - கருப்பையா
11. பெரம்பலூர் - சந்திர மோகன்
12. மயிலாடுதுறை - பாபு
13. சிவகங்கை - பனங்குடி சேவியர் தாஸ்
14. தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
15. திருநெல்வேலி - சிம்லா முத்துச்சோழன்
16. கன்னியாகுமரி - பசிலியான் நசரேத் 
17. புதுச்சேரி - தமிழ் வேந்தன்

ஏற்கனவே முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று வெளியான இறுதி கட்ட பட்டியலின்படி, அதிமுக புதுச்சேரி உட்பட 33 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும், விளவங்கோடு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று வெளியான இறுதி கட்ட பட்டியலின்படி, அதிமுக 33 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow