100 சதவிகித வாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு.. 2009-2019 வாக்கு சதவிகிதம் எவ்வளவு

Apr 19, 2024 - 07:58
100 சதவிகித வாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு.. 2009-2019 வாக்கு சதவிகிதம் எவ்வளவு

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரேதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட்டு வருகின்றனர். தமிழகத்தில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

கடந்த 3 லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் 67.40 சதவீத வாக்குகளும், கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 66.44 சதவீத வாக்குகளும், கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 58.21 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 73.02 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 73.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 72.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 73.02 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு 73.74 சதவிகித வாக்குகள் பதிவானது. கடந்த 2019ஆம் ஆண்டு  72.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

100 சதவீத வாக்குப்பதிவை மையப்படுத்தி வாக்களர்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்று அரசியல் கட்சித்தலைவர்களும் கூறி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow