உக்ரைனுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவி... பிரதமர் மோடி உறுதி..
ரஷ்யாவின் தாக்குதலால் தொடர்ந்து பாதிப்படைந்து வரும் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒன்றரை வருடகாலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாட்டுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தியும், ரஷ்யா தனது நிலைபாட்டில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதால் பல்வேறு விதத்தில் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு உலக நாடுகள் அனு ஆயுதங்கள் உட்பட மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகிறது. அப்படி உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து இந்தியா வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், "இந்தியா-உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் உரையாடியதாகவும், அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கு நடந்து வரும் நிலையில், மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்தியா நிலையான ஆதரவை தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தொடர்ந்து உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கும்" எனவும் கூறியுள்ளார்.
What's Your Reaction?