கண்டெய்னருக்குள் கண்டெய்னர்... 5 கிலோ தங்க நகைகள் அலேக்கா தூக்கிய அதிகாரிகள்...
உரிய ஆவணமின்றி விருதுநகர் வழியாக நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 கிலோ தங்கத்தை தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணமின்றி விருதுநகர் வழியாக நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 கிலோ தங்கத்தை தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையும், தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, விருதுநகரில் சத்திர ரெட்டியபட்டி சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மதுரையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் சென்ற வாகனத்தை, கூடுதல் நிலைக் கண்காணிப்பு அலுவலர் இந்து மதி தலைமையில் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது மதுரையில் உள்ள தனியார் ஏஜென்ஜி மூலம் 5 கிலோ தங்க நகைகளை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் நாகராஜ், டெலிவரி அசிஸ்டண்ட் நரேஷ் பாலாஜி உடன் நாகர்கோவிலில் உள்ள பல்வேறு தனியார் நகைக் கடைகளுக்கு டெலிவரி செய்ய கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதனிடையே தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த வாகனம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தார்.
What's Your Reaction?