காதலரை கரம்பிடித்தார் அமெரிக்க இரட்டையர் பெண்... 3 ஆண்டுகளுக்குப் பின் திருமண செய்தியை வெளியிட்ட அபி ஹென்செல்...

அபி ஹென்செல்லுக்கு 2021 இல் திருமணம் நடந்துள்ளது

Mar 30, 2024 - 11:15
காதலரை கரம்பிடித்தார் அமெரிக்க இரட்டையர் பெண்... 3 ஆண்டுகளுக்குப் பின் திருமண செய்தியை வெளியிட்ட அபி ஹென்செல்...

அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ஒருவரான அபி ஹென்செல் தனது காதலரான ஜோஷ் பவுலிங்கை கரம் பிடித்த செய்தியை 3 ஆண்டுகளுக்கு பின் அறிவித்துள்ளார். 

உலகில் மிகவும் பிரபலமான அபி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்.  1996-ம் ஆண்டில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் பங்கேற்றபின் அபி ஹென்செல் பிரபலமானார்கள். 

இரட்டையர்களான அபி ஹென்சலுக்கு நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனியாக தான் உள்ளது. ஆனால் இருவருக்கும் சேர்த்து கை மற்றும் கால்கள் இரண்டு தான் உண்டு.  

தனித்துவமான வாழ்க்கையின் மூலம் இவர்கள் அனைவரையும் ஈர்க்கின்றனர். இருவரும் தனித்தனியாக எழுதுதல், படித்தலில் ஈடுபடுகிறார்கள். அதே போலவே இருவரும் தனித்தனியாக கார் ஓட்டி அவர்களுக்கென தனியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தனது காதலரான அமெரிக்க ராணுவ வீரர் ஜோஷ் பவுலிங்கை அபி ஹென்செல் திருமணம் செய்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டு தனது திருமண செய்தியை முதல் முறையாக அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow