கல்குவாரிகளில் திட்டமிட்டு ரூ.700 கோடி ஊழல்!.. - சீமான் ஆவேசம்

Feb 23, 2024 - 21:24
கல்குவாரிகளில் திட்டமிட்டு ரூ.700 கோடி ஊழல்!.. - சீமான் ஆவேசம்

அறப்போர் இயக்கம் ஊழலை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில் எத்தனை நாட்களுக்கு வள வேட்டையை தொடரப்போகிறது இந்த திமுக அரசு? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ் ஐஏஎஸ், முறைகேடாக இயங்கிய குவாரிகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோரை இடமாற்றம் செய்திருப்பது அப்பட்டமாக ஆளும் அரசின் எதேச்சதிகர போக்கினையும், வளக்கொள்ளையற்களை ஆதரிக்கும் நடவடிக்கையையும் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களை மீண்டும் அவர்களின் முந்தையப் பணியிடத்தில் அமர்த்துவதோடு, அவர்கள் முன்னர் வெளியிட்ட ஆணைகளை முழுமையாகக் கடைபிடிக்கவும், இந்த ஊழலில் பெரும் பங்கு வகித்து சட்ட விரோதமாக செயல்பட்ட திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மீதும் அவர் மகன் தினகரன், அவரது நண்பர் இசக்கியப்பன், திமுக-வின் நெல்லைக் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல்  ஆகியோர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு முழுவதும்  ஆய்வுகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மாநில அரசினை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

இதனைத் தமிழ்நாடு அரசு செய்ய மறுத்தால் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் விழப்புணர்வுப் பரப்புரை மற்றும் தொடர் போராட்டங்களை இன்னும் வீரயமாக தனது தலைமையில் முன்னெடுக்கும் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow