லஞ்சப் பெ றியில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அதிரடி கைது

அமலாக்கத்துறை அதிகாரியின் அறை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Dec 2, 2023 - 11:29
Dec 2, 2023 - 16:32
லஞ்சப் பெ றியில் சிக்கிய அமலாக்கத்துறை  அதிகாரி அதிரடி கைது

அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ்பாபு  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய  பிரதேசத்தில் அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார்.இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறியும், இதிலிருந்து அவரை காப்பாற்றுவதாகவும் கூறி, மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதற்கு டாக்டர் சம்மதிக்காததால் கடைசியில் 51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதில் கடந்த நவம்பர் 1ம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து கொடுத்துள்ளார்.

மீதித்தொகையை நேற்று டாக்டரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டபோது, இது குறித்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் அளித்தார்.அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி, இன்று திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச்சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை வைத்தனர்.அந்த காரை எடுத்துச் செல்ல முயன்றபோது அமல்லாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர்.ஆனால் அவர் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றார்.

பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாலை 5 மணிக்கு சோதனைக்காக வருகை தந்தனர்.இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். 

இதனைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு  அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்காக சென்றபோது அமலாக்கத்துறையினர் மற்றும்  காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மதுரை உதவி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால் அவர் பயன்படுத்திய அறையில் மட்டும் நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த நடத்தினர்.

பின்னர் அங்கிட் திவாரி அறையில் உள்ள ஆவணங்களை கைப்பற்றினர்.மேலும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பிலும் உள்ள ஆவணங்கள் குறித்து சோதனை நடத்தினர்.இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் உள்ள வழக்கறிஞர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதேபோன்று அமலாக்கத்துறை சார்பில் துணை ராணுவ படையினரும் 50க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow