தஞ்சையில் சமத்துவ பொங்கல் விழா - கயிறு அறுந்ததால் கீழே விழுந்த மேயர், துணை மேயர்

ஆணையர் மகேஷ்வரி,  துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் அலுவலக பணியாளர்கள் கோலப்போட்டியில்  பங்கெடுத்து வண்ண கோலமிட்டனர்.

Jan 12, 2024 - 22:09
தஞ்சையில் சமத்துவ பொங்கல் விழா - கயிறு அறுந்ததால் கீழே விழுந்த மேயர், துணை மேயர்

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கயிறு இழுக்கும் போட்டியின்போது கயிறு அறுந்ததால் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாக கொண்டாடப்பட்டன. விழாவை ஒட்டி மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வாழை மரம் கட்டி, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

மாநகராட்சி அலுவலர்கள பணியாளர்கள், ஊழியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.ஆண்கள் வேஷ்டி கட்டியும், பெண்கள் ஒரே நிறத்தில் சேலை அணிந்தும் வந்து இருந்தனர்.

மேயர் சண் இராமநாதன். ஆணையர், மகேஷ்வரி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் மண்பானையில் சமத்துவ பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.ஆணையர் மகேஷ்வரி,  துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் அலுவலக பணியாளர்கள் கோலப்போட்டியில்  பங்கெடுத்து வண்ண கோலமிட்டனர்.

தொடர்ந்து நடந்த கயிறு இழுத்தல் போட்டியில் மேயர் தலைமையிலும், துணை மேயர் தலைமையிலும் கயிற்றை இழுக்கும்போது கயிறு அறுந்து இருவரும் கீழே விழுந்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow