மழைநீர் தேங்கியதால் இறந்தவர் உடலை எடுத்து செல்ல முடியாமல் தவிப்பு

இறந்தவர் உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Jan 12, 2024 - 14:11
Jan 12, 2024 - 22:13
மழைநீர் தேங்கியதால் இறந்தவர் உடலை எடுத்து செல்ல முடியாமல் தவிப்பு

திருவிடைமருதூர் அருகே சமீபத்தில் பெய்த மழையால் நீர் தேங்கி உள்ளதால் இறந்தவர் உடலை எடுத்து செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம்,திருநீலக்குடி அருகே  சிந்தாமணி தெற்கு தெருவை சேர்ந்த உலகநாதன் ( 85)இவர் இன்று காலை வயது மூப்பு காரணமாக  உயிரிழந்தார்.தெற்கு தெரு வாசிகளுக்கு சுடுகாடு செல்லும் பாதை சமீபத்தில் பெய்த மழையால் சேரும் சகதியமாக மாறியது.இதனால் இவ்வழியில் சடலத்தை எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் உலகநாதன் உடலை அருகில் உள்ள வடக்கு தெரு வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய உயிரிழந்த உலகநாதனின் உறவினர்கள் இருந்த நிலையில்,இதற்கு வடக்கு தெரு வாசிகள், தங்கள் தெரு வழியாக தெற்கு தெருவாசியின் சடலம் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.இறந்தவரும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் ஒரே சமூகமாக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ், திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் வடக்கு தெரு வாசிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு வடக்கு தெரு வாசிகள் ஏற்றுக்கொள்ள வில்லை.உயிரிழந்த உலகநாதனின் உடலை வழக்கமாக எடுத்துச்செல்லும் பாதையில் எடுத்துச்சென்று உடலை அடக்கம் செய்வது என்றும் ,இதற்காக  நாளை காலை கனரக வாகனங்களை கொண்டு பாதை சீரமைக்கப்படும் எனவும் முடிவாகியுள்ளது.

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில், இறந்தவரின் சடலத்தை  அதே சமூகத்தை சேர்ந்த நபர்கள்,நாங்கள் வசிக்கும் தெரு வழியே சடலம் எடுத்துச்செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow