கொலைகள் குறைய தொழிற்சாலைகள் வேண்டும்! -தூத்துக்குடியில் சரத்குமார் பேச்சு

தூத்துக்குடியில் போட்டியிடுவேனா என்பது குறித்தும் முடிவு செய்யவில்லை

Dec 9, 2023 - 16:26
கொலைகள் குறைய தொழிற்சாலைகள் வேண்டும்! -தூத்துக்குடியில் சரத்குமார் பேச்சு

தென் மாவட்டங்களில் கொலைகள் குறைய வேண்டுமென்றால் தொழிற்சாலைகள் பெருக வேண்டும் என்று சரத்குமார் தூத்துக்குடியில் பேட்டி அளிததார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை பாராளுமன்ற சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் இன்று மாலை நடக்கிறது.அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சரத்குமார் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிறுவுவதற்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது, "தென் மாவட்டங்களில் சமீப காலமாக சமூக ரீதியான கொலைகள் அதிகரித்து வருகிறது.இது நிச்சயமாக கவலை அளிக்கும் விஷயமாகும். தென் மாவட்டங்களில் இது போன்ற கொலைகள் நடக்காமல் இருக்க தொழிற்சாலைகள் வரவேண்டும்.தொழிற்சாலையில் வந்தால் தான் வேலை வாய்ப்புகள் பெறுகும். வேலை வாய்ப்புகள் அதிகால்தான் இளைஞர்களின் பார்வை திரும்பும்.

சென்னையில் மழை வெள்ளநீர் விவகாரத்தில் அரசின் செயல்பாடு திருப்திகரமாகவே இருக்கிறது.ஆனாலும் சிறப்பான பணி என்று சொல்ல முடியாது.இப்போது அரசையும் மக்கள் பிரதிநிதிகளையும், அதிகாரிகளையும் குறை சொல்லும் பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் அதை மறந்து விட்டு வாக்களிக்கிறார்கள்.மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு வாக்களிப்பதால் தான் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுகிறது.

எந்த கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும் என்று கேட்கிறீர்கள். இப்போதைக்கு நாங்கள் கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுபோல தூத்துக்குடியில் போட்டியிடுவேனா என்பது குறித்தும் முடிவு செய்யவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி வந்த சரத்குமாரை சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுந்தர், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் நிலைக்கு அழைத்து சென்றனர்.

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow