திருத்தணி முருகன் கோவில் மலைபாதை சேதத்தை ஆய்வு செய்த அமைச்சர் காந்தி
பக்தர்களுக்கு சீரான சாலை போக்குவரத்தை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருத்தணி முருகன் கோவில் மலைபாதையில் மழையால் சேதமடைந்த இடங்களில் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை சாலையின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் தடுப்பு சுவர் சுமார் 12 மீ அகலம், 8 மீ உயரத்திற்கு சேதம் அடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று அப்பகுதியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன் முன்னிலையில் ஆய்வு செய்தார். பாதிப்படைந்த பகுதியை விரைவில் சரி செய்து, பக்தர்களுக்கு சீரான சாலை போக்குவரத்தை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் அன்பரசு, திருத்தணி வட்டாட்சியர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.
What's Your Reaction?