Hotel Management -ஐ தொடர்ந்து விமான கல்வித்துறையில் அடியெடுத்து வைக்கும் "Chennais Amirta".. 100% வேலைவாய்ப்பு உத்தரவாதம்..

ஹோட்டல் மேனேஜ்மென்டை தொடர்ந்து சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் தற்போது விமான கல்வித்துறையில் அடியெடுத்து வைத்துள்ளது.  2024-25 கல்வியாண்டிலிருந்து சர்வதேச இளங்கலை மற்றும் குறுகிய கால தொழிற் கல்வி படிப்புகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.

May 7, 2024 - 20:09
May 9, 2024 - 14:09
Hotel Management -ஐ தொடர்ந்து விமான கல்வித்துறையில் அடியெடுத்து வைக்கும் "Chennais Amirta".. 100% வேலைவாய்ப்பு உத்தரவாதம்..

14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 25,000-க்கும் மேலான வேலைவாய்ப்பினை ஹோட்டல் துறையில் வழங்கி சாதனை படைத்து முன்னோடியாக திகழும் கல்வி நிறுவனம் Chennais Amirta Group of Institutions தான். 

இப்போது சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி மூலம் விமானக் கல்வியில் அடியெடுத்து வைக்கிறது. மலேசியாவில் உள்ள  University College of Aviation-உடன் இணைந்து இளங்கலை மற்றும் குறுகிய கால தொழிற்கல்விப் படிப்புகளை இந்நிறுவனம் தொடங்க உள்ளது. சர்வதேச அனுபவத்தை தரும் இந்தப் படிப்புகள் 2024-25 கல்வியாண்டிலிருந்து தொடங்கப்படுகிறது.

இதற்கான திறப்பு விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த புதிய நிறுவனத்தை சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர்.பூமிநாதன் திறந்து வைத்தார். நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கவிதா நந்தகுமார், தலைமை கல்வி இயக்குனர் லியோ பிரசாத், டீன் மில்டன் மற்றும் பல்கலைக்கழக தலைவர் பானுமதி பலர் கலந்து கொண்டனர்.

Chennais Amirta International Aviation College, Bsc Aviation மற்றும் BBA Airline and Airport Management என 2 பாடத்திட்டத்துடன் Advance Cabin Crew Training, Ground Staff Training, Communication And Personality Development ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட படிப்புக்கான பயிற்சிகளை வழங்கும். இந்த படிப்புகளை வழங்க அனுபவம் வாய்ந்த பிஎச்டி பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக, மலேசியாவில் உள்ள University College of Aviation-ல் 2 மாத காலம் படிப்பார்கள். University College of Aviation விமானப் போக்குவரத்து கல்வி மற்றும் பயிற்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும். இங்கு விமானப் போக்குவரத்து தொடர்பான விமானி பயிற்சி, விமான பராமரிப்பு பொறியியல், விமான போக்குவரத்து மேலாண்மை, விமான நிலைய மேலாண்மை மற்றும் விமான வணிக மேலாண்மை போன்ற பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

Chennais Amirta International Aviation College மவுண்ட் ரோட்டில் 10,000 சதுர அடி பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இது உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. சர்வதேச விமான நிலைய சூழலையும் கொண்டுள்ளது. மாணவர்கள் தங்கள் எதிர்கால பணியிட சூழலை இங்கே கற்கும் போதே அனுபவத்தை இது உறுதிசெய்கிறது. விமான வடிவில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் Thematic வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விமானப் போக்குவரத்துக் கல்வியில் முதன்முறையாக, 'கற்கும் போது சம்பாதிக்கும்' திட்டத்தை சென்னைஸ் அமிர்தா அறிமுகப்படுத்துகிறது. இதில்  மாணவர்களுக்கு படிக்கும் போதே விமானப் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த துறைகளில் மாதம் ரூ. 8,000 முதல் 15,000 வரையிலான சம்பளத்தில் பகுதி நேரமாக வேலைகள் வழங்கப்பட உள்ளது. 

இது குறித்து சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் கூறுகையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வித் துறையில் இந்தியாவிலேயே சென்னைஸ் அமிர்தா தான் ஒரு முன்னோடி. வேலை சார்ந்த படிப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விமானத் துறை சார்ந்தும், விமானத் திறன்களுக்கான தேவையும் வேகமாக அதிகரித்து வருவதால் இந்தத் துறை கணிசமான வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் 100% வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை சென்னைஸ் அமிர்தா கல்லூரி வழங்கும் என்று சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow