போதைப் பொருள் புழக்கம்... ஆளுநரிடம் அளித்த மனுவில் அதிமுக கூறியிருக்கும் புகார்கள் என்னென்ன?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும், ஆளுநர் என்.ரவியை சந்தித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்திருக்கிறார்.

Mar 10, 2024 - 16:22

அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், போதைப் பொருள் கடத்தலில் சிக்கியிருக்கும் ஜாபர் சாதிக், திமுகவின் அயலக அமைப்பின் துணை அமைப்பாளராக இருந்தவர் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. திமுக ஐ.டி விங்கில் முக்கிய பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக், அந்த கட்சியுடன் தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு பல்வேறு நிதிகளை வழங்கியிருக்கிறார் என்றும், அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு அவரே முழு செலவை ஏற்றிருக்கிறார் என்றும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கும் ஜாபர் சாதிக்கிடம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் நடத்திய விசாரணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியுடன், நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்திருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அண்மை காலமாக போதைப் பொருள் கடத்தல் அதிகமாகி இருப்பதாகவும், அதிமுக சார்பில் அந்த பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், போதைப் பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் எதிர்காலம் சீரழிந்து வருவதால், ஆளுநர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் புழக்கத்தால் மாநிலத்தின் அரசியலமைப்பு முற்றிலும் உடைந்திருப்பதாகவும், காவல்துறையினரை ஆளுநர் அழைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow