திரிணாமூலின் 42 பேட்பாளர்கள் அறிமுகம்.. அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லையே...
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து போட்டியிடவுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்
தேசிய எதிர்கட்சிகள் இணைந்து அமைத்த இந்தியா கூட்டணியில் முக்கியம் அங்கம் வகிக்கும், காங்கிரஸும், திரிணாமூல் காங்கிரஸும், பாஜவை எதிர்க்கும் ஒரே புள்ளியில் நின்றாலும், தொகுதி பங்கீட்டில் உடன்படாமல் மேற்கு வங்கத்தில் தனித்தனியே போட்டியிடுகின்றன.
இந்நிலையில், கொல்கத்தாவில் திரிணாமூல் கட்சி சார்பில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக விழாவில், கட்சி தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி 42 தொகுதிக்கான வேட்பாளர்களையும் அங்குள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த நீளமான மேடையில் அழைத்து வந்து, மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 10 தொகுதிகள் பட்டியலின வேட்பாளர்களுக்கான ரிசர்வ் தொகுதிகள் ஆகும். மற்ற 32 பொது தொகுதிகள் ஆகும். இதில் 16 எம்பிக்கள் மீண்டும் எம்பிகளாக போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 26 பேர் புதிததாக கட்சியின் சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டு போட்டியிடவுள்ளனர்.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான் பர்ஹாம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் பர்ஹாம்பூர் தொகுதியில் 1999ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து போட்டியிட இருப்பது குறிப்பிடதக்கது. இதேவேளையில் எம்பி மஹூவா மொய்த்ரா கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
திரிணாமூல் காங்கிரஸின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சிக்கு பின் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்தியா கூட்டணி இத்தேர்தலில் ஒற்றுமையுடன் போட்டியிட்டு பாஜவை வீழ்த்தவே விரும்பியதாக குறிப்பிட்டார். பலமுறை முயற்சித்தும் தொகுதி பங்கீடு முயற்சிகள் திரிணாமூல் காங்கிரஸுடன் நிறைவேறவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
What's Your Reaction?