Duty நேரத்தில் மட்டையான போலீஸ்… வச்சி செய்த விவசாயிகள்..!
தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த போலீசார் மது அருந்திவிட்டு மட்டையானதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த போலீசார் மது அருந்திவிட்டு மட்டையானதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
டெல்லி சலோ பேரணியை தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் உட்பட நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தென் மாநிலங்களிலும் விவசாயிகள் தனிச்சையாக ரயில் மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கைதான விவசாயிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இருந்த இரண்டு காவலர்கள் முழு குடிபோதையில் நடக்க முடியாத நிலையில் முடங்கி கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பணி நேரத்தில் குடித்துவிட்டு மட்டையாகி கிடக்கும் சம்பந்தப்பட்ட 2 போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அவர்களை பிற போலீசார் சமாதானப்படுத்தும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?