குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.88.40 லட்சம் மோசடி- பெண் கைது

சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த லட்சுமி (43) என்பவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Jan 6, 2024 - 16:58
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.88.40 லட்சம் மோசடி- பெண் கைது

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 88 லட்சத்து 40 ஆயிரம் பணமோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ராமாபுரம் பூத்தபேடு மெயின் ரோடு, அன்னை சத்யா நகரை சேர்ந்த கௌதமன் (35).இவருக்கு ராமாபுரம் நாயுடு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன், பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியைச் சேர்ந்த செல்வம் மற்றும் அம்பத்துரைச் சேர்ந்த நித்யா லட்சுமி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

அதன் பேரில், அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகவும், அதற்கு முன்பணமாக அரசாங்கத்திற்கு ரூ.85,000 செலுத்த வேண்டும் என கௌதமனிடம் கூறியுள்ளனர்.

இவரைப்போல் 104 நபர்களிடம் மொத்தமாக 88 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.அதேபோல், மேற்கூறிய நபர்களிடம் புகைப்படம் கைரேகை மற்றும் கண் விழி அடையாளங்களை எடுத்துக் கொண்டு வேனில் ஏற்றி படப்பை அருகே பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை அடையாளம் காட்டி இது உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக்கூறி, பதிக்கப்பட்ட ஒப்புகை சீட்டை கொடுத்து ஏமாற்றி உள்ளனர்.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் கௌதமன் புகார் அளித்தார்.புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த லட்சுமி (43) என்பவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow